தமிழ் நிகண்டுகள் உள்ளடக்கமும் வரலாறும்
பதிப்பாசிரியர்கள்: முனைவர். அ. சித்திரபுத்திரன்
முனைவர் இரா. திருநாவுக்கரசு, முனைவர் மா. பார்வதியம்மாள்
வெளியீட்டு எண்: 371, 2010, ISBN:978-81-7090-414-4
டெம்மி1/8, பக்கம் 172, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
தமிழ் நிகண்டுகளின் அமைப்பும் வரலாறும் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் உரிச்சொற் பனுவல் – உள்ளமைப்பு, கைலாச நிகண்டு சூளாமணி, தமிழ் நிகண்டின் வரலாறு, தமிழ் நிகண்டுகளில் யாப்பிலக்கணப் பதிவுகள், நிகண்டுகளில் இடைச்சொற்கள், வேதகிரியார் சூடாமணி, ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, பஞ்ச காவிய நிகண்டு, கயாதர நிகண்டின் சொற்புல அமைப்பும் மரப்பெயரியல் வகைப்பாடும், சூடாமணி நிகண்டில் புலச்சொற்கள், பிங்கல நிகண்டில் உயிரினச் சொற்களின் வகைப்பாடு, நாமதீப நிகண்டில் நடையியல் கூறுகள், பொதிகை நிகண்டில் தெய்வப் பெயர்கள், அகராதி நிகண்டு, தமிழ் அகராதியியல் மும்மரபுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுரைகள் அமைந்துள்ளன. அகராதி வரலாற்று ஆய்வுக்கு இந்நூல் பெருந்துணையாகும்.