கடல்வாழ் ஆமைகளின் வியத்தகு வாழ்க்கை
நூலாசிரியர்: முனைவர் அ.அப்துல் ரகுமான்
வெளியீட்டு எண்:61, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 86, உரூ:15.00, முதற்பதிப்பு
சாதா அட்டை
தமிழ்ப் பல்கலக்கழக அறிவியற் பண்ணையின் சார்பில் நிகழ்த்தப் பெற்ற அறிவியற் சொற்பொழிவு நூலாக வெளிவந்துள்ளது.
கடல் ஆமை இனங்களை அறிதல், புறத்தோற்றங்கள், கடலாமைகளை அளவெடுக்கும் முறைகள், அடியாளக்குறி கட்டும் முறைகள், கடலாமைகளின் உணவுப்பழக்க வழக்கங்கள், உணவு முறைகளும் இனப்பெருக்கமும், ஆமை முட்டைகளின் விலங்கின எதிரிகள், பாதுகாக்கும் முறைகள், இந்தியக் கடல்களில் கடலாமைகளின் நிலை, ஆமை வளர்ப்பும் அவற்றின் உற்பத்திப் பெருக்கமும், உலக நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகின்ற கடலாமைகளின் பொருள்கள் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் பல்வேறு செய்திகளை அளித்துள்ளார்,
கடல்வாழ் விலங்கின ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுடைய நூல்.