பழந்தமிழகத்தில் இரும்புத்தொழில்
நூலாசிரியர்: முனைவர். வே. சா. அருள்ராசு
வெளியீட்டு எண்: 216, 2000, ISBN:81-7090-276-2
டெம்மி1/8, பக்கம் 194, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
இந்நூலில், பழந்தமிழரின் இரும்பும் பிறர் கருத்தும், பழந்தமிழகத்தின் எல்லைகளும் இரும்புத்தாது கிடைத்த் இடங்களும், தமிழ் நிகண்டுகளில் இரும்புப் பொருட்களின் பெயர்கள், சங்க காலத்தில் கொல்லர்களின் நிலையும் அக்காலச் சமுதாயமும், சங்க காலத்தில் இரும்பின் பயனும் இரும்புப் பொருட்களும், சங்க காலக் கொல்லர் கருவிகள், சங்க காலக்கொல்லுத் தொழில்நுட்பங்கள், தமிழகத்தில் இரும்புத் தொழில் குறித்த தொல்பொருள் சான்றுகள், தமிழகத்தில் இரும்பின் காலம், மரபுவழிக் கொல்லர்களின் வாய்மொழிச் செய்திகள் போன்ற தலைப்புகளில் ஆசிரியர் பல செய்திகளை உரிய சான்றுகளோடு விளக்கியுள்ளார்.