பஞ்ச மரபில் இசை மரபு
நூலாசிரியர்: முனைவர் இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்:113, 1989, ISBN: 81-7090-140-5
டெம்மி1/8, பக்கம் 142, உரூ. 30.00, முதற்பதிப்பு
முழு காலிகோ
இவ்வாய்வு நூல் பஞ்ச மரபு நூலின் இசை மரபினை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. பஞ்ச மரபு–இசை மரபில் கூறப்பட்டுள்ள பண்டைய இசைத்தமிழின் அடிப்படை இலக்கணங்களைச் சிலப்பதிகார உரையிற் கூறப்பட்ட விளக்கங்களோடு ஒப்பிட்டும், இவற்றைத் தற்கால வழக்கிலுள்ள இசை இலக்கணங்களோடு தொடர்புபடுத்தியும் தெளிவாக அறிவது இவ்வாய்வு நூலின் முக்கிய நோக்கமாக உள்ளது.
பஞ்சமரபு பற்றிய ஆய்வுச் செய்திகள், யாழ்மரபு, பாலை இலக்கணம், பண் இலக்கணம், வங்கியமரபு, கண்டமரபு, இசைப்பாக்களும் இசைப் புணர்த்தலும், ஆய்வு முடிபுகள் என்னும் எட்டு இயல்களில் செய்திகள் அளிக்கப் பெற்றுள்ளன.