தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு
நூலாசிரியர்: க. வெள்ளைவாரணனார்
வெளியீட்டு எண்: 80, 1987, ISBN
டெம்மி 1/8, பக்கம் 28, உரூ. 2.00, முதற்பதிப்பு
சாதா அட்டை
நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் அவர்களது தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு பற்றிய நூல். பாரதியார் அவர்கள் பிற்கால உரையாசிரியர்கள் கருத்தின் வழிச்செல்லாது தொல்காப்பிய மூலத்தினையே அடியொற்றிப் புதிய உரையை வரைந்த பெருமையும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
தமிழுக்கேயுரிய மரபுகளைப் புலப்படுத்துவதே தமிழியல் நூலாகிய தொல்காப்பியம் என்னும் பேருண்மையை வற்புறுத்தியும் தமிழ் மக்களது தொன்மை நாகரிகத்தினையும் தமிழின் தனித்தன்மையையும் நாவலர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளமையை ஆசிரியர் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.