தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்
வெளியீட்டு எண்: 382, 2010, ISBN:978-81-7090-425-0
டெம்மி1/4, பக்கம் 156, உரூ. 500.00, முதற்பதிப்பு
முழு காலிகோ
தஞ்சைப் பெரியகோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள சோழர்கால அரிய வண்ண ஓவியங்கள் இப்பொழுது முதன் முதலாக அச்சிடப்பெற்று நூலாக வந்துள்ளது. மாமன்னர் இராசராசன் தஞ்சையில் எழுப்பியுள்ள பெரியகோயிலிம் ஆயிரமாவது ஆண்டு விழாவில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோழர்கால ஓவியப் பகுதிகளை 9 பெரும் பகுதிகளாகப் பிரித்து, தனித்தனியே ஆராயப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகட்கு முந்தைய ஓவியங்களுக்கு இணையாக்க் கோட்டோவியங்களை வரைந்து அச்சாக்கம் செய்திருப்பது மூலம் இவ்வரிய ஓவியங்களின் நுட்பங்களை எளிதாக அறிய முடிகிறது.
தமிழக ஓவியக் கலைக்குச் சான்றாக இந்நூல் அமைந்துள்ளது அறியத் தக்கது.