குழந்தைகளுக்குக் காந்தி
நூலாசிரியர்: முனைவர் அரோமா குளோரிசாம்
வெளியீட்டு எண்:98, 1988, ISBN:81-7090-117-0
டெம்மி 1/8, பக்கம் 72, உரூ.10.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
இந்திய நாட்டுத்தந்தை என்ற மேன்மையைப்பெற்ற காந்தியடிகள் பற்றிச் சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. காந்தியின் இளமைப்பருவம் முதலில் விளக்கப்படுகிறது. காந்தியின் சிறப்புக்குக் காரணமான தன்மைகள் பெரிதும் குறிப்பிடப்பெறுகின்றன. உண்மை, தவறுகளை உணர்தலும் தண்டனை வேண்டலும், கீழ்ப்படிதல், பெற்றோரைப் பேணல், பகுத்தறிந்து வாழல், கூச்சம், வன்முறையின்மை, அன்பு, மனிதாபிமானம், ஒத்துழையாமை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, பொது வாழ்வில் தூய்மையை வற்புறுத்தல் போன்ற பல்வேறு தன்மைகளை மிக எளிய நடையில் ஆசிரியர் விவரித்துள்ளார்.