பெரிய புராணம் – ஓர் ஆய்வு
நூலாசிரியர்: பேரா அ.ச. ஞானசம்பந்தம்
வெளியீட்டு எண்:75, 1987, ISBN
டெம்மி 1/8, பக்கம் 820, உரூ. 103.00, முதற்பதிப்பு,
முழு காலிகோ
சைவ சமய இலக்கியங்களின் முடிமணியாக விளங்கும் பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர்புராணம் தோன்றிய காலச்சூழல், சைவ சமய வளர்ச்சியில் இப்பெருநூலின் இடம், இலக்கிய வரிசையில் இதன் இடம், காப்பியம் என்று இதனைக் கூறமுடியுமா? என்பது முதலான கருத்துக்களை ஆராய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலின் முதற்பகுதியில் வேதம், வைதீகம், சைவம் இவற்றிடைத் தொடர்பு, தமிழ்ச் சைவத்தில் வேதத் தொடர்பு, சைவ சமயத்தின் தொன்மை, வளர்ச்சி முறை, வழிபாட்டு முறை என்பவை விளக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில், இலக்கிய வரிசையில் இதன் இடம், இதன் கவிதைச் சிறப்பு, கவிதைகள் தோற்றம், வகைகள், வளர்ச்சி, தனிக்கவிதைகள், நெடும்பாடல்கள், விருத்தப்பாடல்கள், கதை பொதி பாடல்கள், காப்பியத் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வு போன்றவை ஆராயப்பெற்றுள்ளன.