தந்தை பெரியாரின் அறிவியல் சிந்தனைகள்
நூலாசிரியர்: முனைவர். ந. வேலுசாமி
வெளியீட்டு எண்: 353, 2009, ISBN: 978-81-7090-396-3
டெம்மி1/8, பக்கம் 58, உரூ. 50.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
பேராசிரியர் முனைவர் ஏசுதாசன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது. இன்று நாம் பயன்படுத்தும் பல அறிவியல் சாதனங்கள் பற்றி அன்றே தந்தை பெரியார் அவர்கள் கூறியிருப்பதையும் அவருடைய சிந்தனைகளையும் இந்நூல் விளக்குகிறது. மக்கள் தொகை பெருக்கம், கிராமச் சீர்திருத்தம், அஞ்ஞானம்–மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், எழுத்துச் சீர்திருத்தம், எந்திரத்தேவை, போர்க்கருவிகளில் புதுமை போன்ற பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் தந்தை பெரியாரின் சிந்தனைகளை எடுத்துரைக்கின்றார்.
பகுத்தறிவுச் சிந்தனைகள், முற்போக்குச் சிந்தனைகள், அறிவியல் சிந்தனைகள், மனிதநேயம் ஆகிய உயர்குணங்களின் வார்ப்பே தந்தை பெரியார் என்பதை இந்நூல் வழி நன்கு அறியலாம்.