நச்சினார்க்கினியர் இலக்கியத்திறன்

நூலாசிரியர்: பேரா க. ஆறுமுகம்
வெளியீட்டு எண்:96, 1988, ISBN:81-7090-115-4
டெம்மி 1/8, பக்கம் 44, உரூ.6.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

நீதிபதி மகராசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலாக வெளியிடப்பெற்றுள்ளது.

நச்சினார்க்கினியரது உரை வாயிலாக அறியும் திறனாய்வுப் பண்புகளை ஆசிரியர் விவரிக்கின்றார். ஒழுக்கப்பண்பு, முரண்கொளாச்சிறப்பு, பெயர் பொதிகதை, வினை விளையாட்டு, மயக்கத்தில் தெளிவு, சுட்டு வினாத்திறன், அடை தருகொடை, சொற்றொடர்ப் பிரிப்பு, நகைச்சுவைத்திறன், உவமையில் இளமை, உவமையின் ஆட்சி, உவமையின் கிளைகள், உவமையின் மயக்கம், உருவகத்திறன், உருவக அழகு மயக்கம், சொற்பொருள் திறன், அடுக்குத்தொடர் நயம் போன்ற பல்வேறு தலைப்புகளில் நச்சினார்க்கினியரின் இலக்கியத்திறனை ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.

News & Events