பொது அறுவை மருத்துவம்
(தமிழ்நாடு அரசின் பரிசு பெற்ற நூல்)
மருத்துவர்: அ. நரேந்திரன்
வெளியீட்டு எண்:66, 1986, ISBN
டெம்மி 1/8, பக்கம் 542, உரூ. 150.00, முதற்பதிப்பு
முழு காலிகோ
தமிழ்ப் பல்கலக்கழகம் பொறியியல், மருத்துவ நூலாக்கத் திட்டத்தின் கீழ் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தை யொட்டி செரிமான, சிறுநீர் மண்டலங்களைத் தவிர்த்து இது எழுதப்பட்டு இருக்கிறது.
முதலில் அறுவை மருத்துவத்தின் வரலாற்றை மருத்துவர் விளக்குகிறார். பிறகு தொடர்ந்து பொது அறுவை மருத்துவர் குறித்து விளக்கியுள்ளார். நூல் முழுவதிலும் ஆங்காங்கே பட விளக்கங்கள் தந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். நூலாசிரியரின் கடுமையான முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும். மருத்துவம் பயிலும் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.