தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் தொகுதி – 1
ஆங்கிலம்: எட்கர் தர்ஸ்டன்
தமிழில்:முனைவர் க. இரத்னம்
வெளியீட்டு எண்:72-1, 1987, ISBN:81-7090-079-4
டெம்மி 1/8, பக்கம் 610, உரூ. 150.00, முதற்பதிப்பு, முழு காலிகோ
மறுபதிப்பு:270.00 (2010)
சாதா அட்டை
எட்கர் தர்ஸ்டன் அவர்கள் எழுதிய இந்நூல் 1909ஆம் ஆண்டு ஏழு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழி பெயர்ப்பு இப்பொழுது நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
இன இயல் ஆய்வாளர்களால் பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மத்திய இந்தியாவைச் சேர்ந்த கோன்ட் பழங்குடிகள் தொடங்கி, இன்றளவும் இனவியல் ஆய்வாளர்களுக்குப் புதிரானவர்களாக உள்ள தென் தமிழ் நாட்டைச் சேர்ந்த கோட்டை வேளாளர் வரையிலான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரையும் சாதியினரையும் பற்றிய விவரங்கள் இதனுள் தொகுக்கப்பட்டுள்ளன.
வழக்கு வரலாறுகள், நாட்டார் கதைகள், புராண இதிகாசங்கள், பண்டைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஆவணங்கள், கையேடுகள், சயணக் குறிப்புகள், அறிக்கைகள், இதழ்கள் ஆகிய அனைத்திலிருந்தும் இன இயல் தொடர்பான செய்திகள் திரட்டியளிக்கப்பட்டுள்ளன.
இம்முதல் தொகுதியில், ‘அபிசேகர்’ முதல் ‘பயகர’ வரையான தலைச்சொற்களுக்கு விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.