பெருஞ்சொல்லகராதி தொகுதி – 1
முதன்மைப் பதிப்பாசிரியர்: முனைவர் தா.வே. வீராசாமி
வெளியீட்டு எண்:95-1, 1988, ISBN:81-7090-113-8
டெம்மி 1/8, பக்கம் 692, உரூ.200.00, முதற்பதிப்பு
முழு காலிகோ
தமிழ் அறிய விரும்புவோர்க்கு ஏற்ற வண்ணம் தமிழ்ச் சொற்களுக்குரிய பொருளைத் தமிழில் தந்து உதவும் வகையில் இவ்வகராதி உருவாகியுள்ளது. தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை வளர்ந்து வந்துள்ள தமிழ்ச் சொற்களையும், அவற்றின் கூட்டால் அமைந்த தொகைச் சொற்களையும், பொருள், எழுத்து வடிவம், இலக்கணம், பயன்படுநிலை என்பனவற்றையும் இவ்வகராதி காட்டுகிறது.
தமிழ்ச் சொல்லின் பொருள் நிலையை முறையாக அறியவும் ஏற்ற இடங்களில் வரலாற்று முறையில் உணரவும் இது வழி செய்கிறது. தமிழில் பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய ஆற்றல்களை வளர்ப்பதற்கும் சொல் வளத்தைப் பெருக்கித் தம் கருத்துக்களைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கும் இவ்வகராதி பெரிதும் உதவும்.
இம்முதற்தொகுதியில் ‘அ’ முதல் ‘அனைவோர்’ வரையிலான தலைச்சொற்களுக்கு விளக்கங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.