சங்க இலக்கியத் தாவரங்கள்
நூலாசிரியர்: முனைவர் கு. சீநிவாசன்
வெளியீட்டு எண்:73, 1987, ISBN:81-7090-080-8
டெம்மி 1/8, பக்கம் 824, உரூ. 120.00, முதற்பதிப்பு,
முழு காலிகோ
சங்க இலக்கியத் தாவரங்களின் 210 பெயர்களும் 150 மரஞ்செடி கொடிகளைக் குறிக்கின்ற வகையில் இந்நூலில் 150 விளக்கக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாவரத்திற்கும் முதற்கண் சங்க இலக்கியப் பெயரும், தாவர இரட்டைப் பெயரும், தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. அடுத்து பெரும்பாலான தாவரங்களின் விளக்கவுரையின் சுருக்க வரைவு எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் தாவரத்தின் இலக்கிய விளக்கமும் அதற்கடுத்து அதனுடைய தாவர அறிவியல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தாவரங்களைப் பற்றிச் சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் உண்மைகள் இந்நாளைய தாவரவியல் நூல்களின் கருத்துக்களுக்கு எந்த அளவில் ஒத்தும் உறழ்ந்தும் சிறந்தும் விளங்குகின்றன என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டு உள்ளது. பின்னிணைப்பிலுள்ள பட்டியல்கள் மிகவும் பயனுடையன.