சீன இலக்கியம்
நூலாசிரியர்: முனைவர் சோ. ந. கந்தசாமி
வெளியீட்டு எண்: 393, 2013, ISBN:978-81-7090-436-6
டெம்மி1/8, பக்கம் 733, உரூ. 500.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
உலகச் செம்மொழிகள் இலக்கியம் வரிசையில் இரண்டாம் தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. வரலாற்றில் முற்காலம் முதல் பொற்காலம் வரையில் சீன இலக்கியங்கள் சிறப்பாகத் திகழ்வதை ஆசிரியர் மிக விரிவாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார். சீன இலக்கியங்கள் பற்றித் தமிழில் வெளிவரும் முதல் விரிவான ஆராய்ச்சி நூலாக இந்நூல் திகழ்கிறது.
சீன மக்களின் நம்பிக்கை, நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வீரதீரம், மகளிரின் மாட்சி, அரசியல், இலக்கிய ஈடுபாடு, சமுதாய மேம்பாடு உள்ளிட்ட பல கூறுகளை அனைவரும் அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.