பாரதி பாடல்கள்

ஆய்வுப்பதிப்பு
பதிப்பாசிரியர்: ம. ரா. போ. குருசாமி
வெளியீட்டு எண்:77, 1987, ISBN:81-7090-085-9
டெம்மி 1/8, பக்கம் 1326, உரூ. 80.00, முதற்பதிப்பு,
மறுபதிப்பு: 2001 – உரூ. 200,00
அரை காலிகோ

பாரதியாரின் கவிதைகள் அவை எழுதப்பட்ட கால வரிசையில் தொகுக்கப்பட்டு புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப்பு, இதுவரை வெளிவந்த பதிப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்டதாக அமைந்துள்ளது. 267 கவிதைகள் இந்தப் பதிப்பில் தரப்பட்டுள்ளன. மொத்தம் 2576 செய்யுட்களாகப் பதிப்பாசிரியர் பிரித்துக் காட்டியுள்ளார். முன்னர் வெளியான பதிப்புகளில் பாரதியாரும், பிற்காலப் பதிப்பாசிரியர்களும் எழுதிய முன்னுரைகள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் பல வரலாற்றுச் செய்திகளும் சுவையான தகவல்களும் (259 பக்கங்கள்) தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. சில புதிய பாடல்களும் இத்தொகுப்பில் முதன்முதலாக வெளிவந்துள்ளன.

ஆராய்ச்சிப் பதிப்பு என்று சொல்லத்தக்கதாக இப்பதிப்பு அமைந்துள்ளது. பாடல் தலைப்பு மாற்றம், பாடவேறுபாடு, காலக்குறிப்பு, பின்னிணைப்பு முதலியவற்றைக் கொண்டிருப்பதால் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள இப்பதிப்பு மிகவும் பயனாகும்.

News & Events