பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளில் மொழி நடையும் சொல்லாட்சியும்
பதிப்பாசிரியர்கள்: முனைவர். அ. சித்திரபுத்திரன்
முனைவர் இரா. திருநாவுக்கரசு, முனைவர் மா. பார்வதியம்மாள்
வெளியீட்டு எண்: 370, 2010, ISBN:978-81-7090-413-7
டெம்மி1/8, பக்கம் 437, உரூ. 160.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
அண்ணாவின் மொழியாற்றலை ஆய்வுலகில் பதிவு செய்யும் நோக்கிலான 63 கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் மொழி ஆளுமை, தமிழ் ஆட்சி, மொழிநடை, சொல்லாட்சி, கருத்து விளக்க உத்திகள், சிந்தனைகள் போன்ற பன்முகப் பரிமாணங்கள் தனித்தனியே ஆராயப்பட்டுள்ளன.
அண்ணாவின் கதைகள், நாடகங்கள், பொழிவுகள், கடிதங்கள், பேச்சுகள் போன்றவை உணர்த்தும் தனித்த மொழி நடையும் சொல்லாட்சித் திறனும் இந்நூலால் நன்கு புலனாகும்.