வியாசரும் வில்லியும்
ஒரு திறனாய்வு
நூலாசிரியர்: சகு. கணபதி
வெளியீட்டு எண்:86, 1988, ISBN:81-7090-103-0
டெம்மி 1/8, பக்கம் 248, உரூ24.00, முதற்பதிப்பு
சாதா அட்டை
வட மொழியில் பாரதம் என்னும் மூலநூலை எழுதியவர் வியாசர். அவர் தந்த வியாச பாரதம் நூலின் வழிநூலாக எழுந்த தமிழ்நூல் வில்லிபுத்தூரார் எழுதிய வில்லிபாரதம். இவ்விரண்டு நூல்களிலும் உள்ள வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் அலசி ஆராயும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
இந்நூலின் முதற்பகுதியில், வியாசர் காட்டிய வழி முதலாக இராமாயண மகாபாரதங்களின் மதிப்பீடு, இந்திய ஒருமைப்பாடு, வில்லியார் காட்டாத கதைகள், பாரத காலத்துப் பாலுறவுகள், வியாசரின் அபூர்வப் பாத்திரப் படைப்பு, கண்ணபிரானும் பாரதப்போரும் போன்ற தலைப்புகளில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில், வில்லியார் வகுத்துக்கொண்ட நெறி என்பதன் கீழ் பல்வேறு பாரத நூல்கள், வரலாற்றுச் சான்றுகள், ஆசிரியர் காலம், பெயர், பிறப்பிடல், சாதி, சமயம், கல்வி, குணம், பெருமை, தமிழ்ப்பற்று, நாட்டன்பு, நூல் இயற்றிய காரணம், நூலின் நடை, சில கொள்கைகள் போன்றவை பற்றி ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.