சோழர் செப்பேடுகள்
பதிப்பாசிரியர்: புலவர் வே. மகாதேவன்
வெளியீட்டு எண்: 394, 2013, ISBN:978-81-7090-437-3
டெம்மி1/4, பக்கம் 1236, உரூ. 1350.00, முதற்பதிப்பு
முழு காலிகோ
தமிழில் செப்பேடுகள் பதிப்பில் மிகப்பெரிய தொகுப்பு நூலாக இந்நூல் வெளியிடப்பெற்றுள்ளது.
முதற்பகுதியில் 17 அரிய செப்பேடுகள் பற்றியும், அடுத்து வரும் பகுதிகளில் காலம் கணக்கிட இயலாத செப்பேடுகளும் விரிவாக விளக்கப்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு நிலையிலும் பல செப்பேடுகள் குறிக்கப்பெற்றுள்ளன.
ஒவ்வொரு செப்பேட்டிற்கும் அது கிடைத்த விதம், அதன் பதிப்பு விவரம், செப்பேட்டின் வரலாறு போன்றவற்றை விளக்குவதுடன் பல்வேறு தலைப்புகளில் வகைப் படுத்தித் தகவல்களை அளித்துள்ளமை மிகவும் குறிப்பிடத்தக்கது.
விரிவான ஆய்வு முன்னுரையில் செப்பேடுகள் அறிமுகம், சோழர் செப்பேடுகள், எழுத்தியல் – அரிய செய்திகள், வரை படங்கள், சிறப்புச் சொற்கள் விளக்கங்கள், அரச பரம்பரைகளைப் பற்றிய விவரங்கள் மற்றும் பல புதிய செய்திகள் பொதிந்துள்ளன.
சோழர் வரலாற்றில் இதுவரை விளக்கம் பெறாத சில பகுதிகளை ஆய்வு செய்யும் நோக்கில் இந்நூல் அமைந்துள்ளது. வரலாற்று ஆய்வுக்குப் பெருந்துணையாகவும் இந்நூல் அமையும்.