திருமந்திரத்திற் காணும் சமயக் கலைச்சொல் விளக்கம்
நூலாசிரியர்: முனைவர். அ. மா. பரிமணம்
வெளியீட்டு எண்: 249, 2002, ISBN:81-7090-309-2
டெம்மி1/8, பக்கம் 282, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
இவ்விளக்க நூல், திருமந்திரத்திற் காணப்படும் சைவ சமயச் சார்பான சொற்கள், தொடர்கள், சமயப் பொதுவான சொல், தொடர்கள், உருவகச்சொற்கள் ஆகியவற்றை அகர வரிசையில் அமைத்து விளக்குவதால் திருமந்திரப் பயிற்சிக்கு நல்ல துணையாக அமையும். இத்துறையில் பலர் மேலும் பல கருவி நூல்களை உருவாக்கவும் துணையாக அமையும்.
திருமந்திரத்திற் காணும் பிற மொழிச் சொல்லாட்சிகளை இந்நூல் அகர நிரல் படுத்திக் காட்டுவதால் திருமந்திரத்தின் கால ஆராய்ச்சிக்கும் அருந்துணையாகும்.