கணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை தொகுதி – 1(TAMIL)
தொகுப்பாசிரியர்கள்: திரு. கா.செ. செல்லமுத்து
திரு த. பத்மநாபன், புலவர் ப.வெ. நாகராசன்
வெளியீட்டு எண்: 123-1, 1991, ISBN: 81-7090-151-0
கிரவுன்1/4, பக்கம் 508, உரூ. 80.00, முதற்பதிப்பு
அரை காலிகோ
ஐந்து தொகுதிகளில் வெளியாகும் இப்பதிப்பானது உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் ஓலைச்சுவடிகள் பற்றிய செய்திகளை அளிக்கிறது. 1985-ஆம் ஆண்டு வரை கிடைத்த 21,973 ஓலைச்சுவடிகள் குறித்த செய்திகள் இதில் அடங்கியுள்ளன. இங்கிலாந்து, டென்மார்க், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, பிரான்சு, மேற்குஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி, இத்தாலி, ஸ்வீடன் மற்றும் யு. எஸ். எஸ்.ஆர் முதலிய பத்து வெளிநாடுகளிலிருந்தும் சுவடி பற்றிய செய்திகள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பணி முற்றிலும் கணிப்பொறி வழி செயற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வட்டவணை பல்வேறு வகைப்பட்ட பொருள் தலைப்புகளை உள்ளடக்கியது. இது, பல துறைகளிலும் ஆய்வினை மேற்கொண்டுள்ள ஆய்வாளர்களுக்கு அறிவுக் களஞ்சியமாகப் பயன்படும். தமிழில் 5 தொகுதிகளும் ஆங்கிலத்தில் 5 தொகுதிகளும் வெளிவந்துள்ளன.
இம்முதல் தொகுதியில் 1 முதல் 6019 வரையான நூல்களுக்கான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.