தமிழிலக்கண நூல்களும் பாட வேறுபாடுகளும்
நூலாசிரியர்: பாவலரேறு ச. பாலசுந்தரம்
வெளியீட்டு எண்: 128-4, 1993, ISBN: 81-7090-200-2
டெம்மி1/8, பக்கம் 86, உரூ. 25.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு
இந்நூலில், மொழிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆசிரியர் விரிவாக விளக்குகிறார். எழுத்து வரிவடிவும், வளர்ச்சியும் என்னும் தலைப்பில் சொற்குறியீட்டு வரிவடிவம், அசைக்குறியீட்டு வரிவடிவம், ஒலிக்குறியீட்டு வரிவடிவம் ஆகியவற்றை ஆராய்ந்துரைக்கின்றார். தமிழ் இலக்கண நூல்கள் தோன்றிய வரலாறுகளைக் கூறிய பின்னர் தமிழிலக்கணச் சிறப்பும் தனித்தன்மையும் பற்றி விளக்குகிறார். தமிழிலக்கணப் பிரிவுகள் இற்றைக்கு வழக்கிலுள்ள தமிழிலக்கண நூல்களின் யாப்பமைப்பு போன்றவற்றை விவரித்துள்ளார். இலக்கண நூல்களில் பாடவேறுபாடுகள் என்னும் தலைப்பில் பிழைகள் நேரும் சூழல், பாடப் பிழையும் பாடவேறுபாடும், உரையாசிரியரும் பதிப்பாசிரியரும், இடப்பிறழ்ச்சி போன்றவற்றை உரிய எடுத்துக்காட்டுகளுடன் குறித்துள்ளார். சுவடிப்பதிப்பு மற்றும் மூலபாட ஆய்வினை மேற்கொள்ளும் ஆய்வறிஞர்களுக்கு இந்நூல் ஓர் அடிப்படை நூலாக அமைந்துள்ளது.