அகத்தியர் வைத்திய காவியம் – 1500
பதிப்பாசிரியர்: முனைவர். வே.இரா. மதவன்
வெளியீட்டு எண்: 166, 1994, ISBN:81-7090-214-2
டெம்மி1/8, பக்கம் 1054, உரூ. 200.00, முதற்பதிப்பு
அரை காலிகோ
நீண்ட நெடுங்காலமாகப் பயன்பாட்டிலிருந்து வரும் தமிழ் மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஒரு தனிப்பெரும் நூலாக விளங்கி வரும் ‘அகத்தியர் வைத்திய காவியம் 1500’ என்னும் நூல் அதன் சிறப்பையும் அருமையும் கருதி இப்பொழுது செம்பதிப்பாக வெளியிடப்பெற்றுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையிலுள்ள ஏழு சுவடிகள் இதற்குரிய அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுடன் பதின்மூன்று சுவடிகள் ஒப்பிடப்பெற்று இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நூலில் ஒரே தலைப்பில் கிடைக்கும் பல்வேறு செய்திகளையும் தனித்தனியே தொகுத்து, அந்தந்தத் தலைப்புகளின் கீழே உரை விளக்கங்கள் இக்கால அளவு முறைகளுடன் அகர வரிசையில் தனியே எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. இவை, நூலிலுள்ள செய்திகளை யாவரும் தெளிவாக அறிய உதவும். பின்னிணைப்பாக ‘மருத்துவப் பொருட்கள் அட்டவணை’ மற்றும் ‘நோய் அகரவரிசை’ போன்றவை தனித்தனியே எழுதித் தொகுத்தளித்திருப்பது பயன்பாட்டு நோக்கில் அமையப் பெற்றதாகும்.
தமிழ் மருத்துவ ஆர்வலர் அனைவருக்கும் பொது மக்களுக்கும் இப்பதிப்பு மிகவும் பயனுடையதாகும்.