மொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்
நூலாசிரியர்: கா.சுப்பிரமணியப்பிள்ளை
வெளியீட்டு எண்: 18, 1985, ISBN
டெம்மி 1/8, பக்கம் 160, உரூ. 45.00, நிழற்படப்பதிப்பு
முழு காலிகோ
தமிழில் மொழிநூற் கொள்கைகளை விளக்கும் முதல் நூல். இந்நூலை, சேலம் தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம் 1939ஆம் ஆண்டில் அச்சில் வெளியிட்டுள்ளது. கிடைத்தற்கு அரிதான இந்நூலை நிழற்பட மறுபதிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பொழுது வெளியிட்டுள்ளது. இந்நூலில், மொழிநூற் பொதுக் கொள்கைகள், எழுத்து வடிவம், மேலைநாட்டு மொழிநூல் வரலாறு, எழுத்தொலி இயல்பு, சொல்லமைப்பு, தமிழ்மொழி அமைப்பு குறித்துக் கூறப் பெறுகின்றன. திராவிடமொழிகள் பற்றிய விரிவான ஆய்வுகளுக்கு அடிப்படையான தகவல்களை இந்நூல் வழிப்பெறலாம். தமிழுக்கும் உலகிலுள்ள பிற மொழிகளுக்குமுள்ள சொல்லொற்றுமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. தமிழ்மொழி அமைப்புப் பற்றியும் மொழிநூற் கொள்கைகள் பற்றியும் ஆராயும் ஆர்வலர்களுக்கு இந்நூல் பெருந்துணையாகும்.