தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
நூலாசிரியர்: கே.எம். வேங்கடராமையா
வெளியீட்டு எண்: 11, 1984, ISBN
கிரவுன் ¼, பக்கம் 552, உரூ. 109.00, முதற்பதிப்பு
அரை காலிகோ
தஞ்சை மராட்டியர் கால ஆவணங்களின் துணைகொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் அரிதின் முயன்று தக்க ஆதாரங்களுடன் பல செய்திகளைத் தொகுத்து அளித்துள்ளார்.
இந்நூலில், ஆட்சிப்பரப்பும் உட்பிரிவுகளும், அரசமுறை, கடிதங்கள், ஒப்பந்தங்கள், ஆங்கிலேய அதிகாரிகள், அரசு அலுவலர்கள், அண்டை நாடுகளுடன் தொடர்பு, தலயாத்திரைகள், அரசாங்க வரவு, நாணயங்கள், நீதிமன்றங்கள், கோயிற்பணிகள், சமயப்பொறை, இசை, நாடகம், நாட்டியம், கல்விநிலையங்கள், நிலக்கொடை, சத்திரங்கள், அறங்கள், மருத்துவம், விரதங்கள், பண்டிகைகள், உடன்கட்டை, தேவதாசிகள், யாகங்கள், தொழில்கள், விலைவாசி, பூசல்கள், சிற்பமும் ஓவியமும், மடங்கள் தமிழுக்கு அளித்த ஆதரவு போன்ற தலைப்புகளில் செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.