சித்த மருத்துவத்துறை

நோக்கம்

தாவரவியல், தவிர வேதியியல், மூல மருந்தியல், உயிர் வேதியியல் முறையில் சித்த மருந்துகளின் செயல் திறனை ஆய்வு செய்தல், மூலிகைப் பண்ணையைப் பராமரித்தல், திசு மருந்துகளின் செயல்திறனை ஆய்வு செய்தல், மூலிகைப் பூங்கா அமைத்தல், மூலிகைக் கள ஆய்வு, சித்த மருத்துவ நூல் பதிப்பித்தல், மொழிபெயர்த்தல், சித்த மருந்துகளின் அறிவியல் ஆய்வு மற்றும் தர உறுதி செய்தல், மருத்துவமனையில் புறநோயாளர்களை ஆய்வு செய்தல், சித்த மருத்துவத் தரவுகளைக் கணிப்பொறியிலும், ஒளி, ஒலி வழியும் ஆவணப்படுத்தல்.

சிறப்புச் செய்திகள்

புறநோயாளர் பிரிவில் பொது மக்களுக்குப் பல்வேறு நோய்கள், தோல் நோய்கள், நுரையீரல் தொடர்பான நோய்கள், மகப்பேறின்மை, குடற்புண், மயிர்புழுவெட்டு, மஞ்சள் காமாலை, மூட்டுவாதம், கருப்பை மற்றும் மார்பகப்புற்று, ஒற்றைத் தலைவலி, வெண்குட்டம், இரத்த சோகை, கண் மற்றும் பல நோய்கள் போன்ற பல நோய்களுக்கு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மகப்பேறின்மைக்கு மூன்று தம்பதியினர் சித்த மருத்துவ சிகிச்சையினால் பயன்பெற்று மகப்பேறடைந்துள்ளன.

ஆசிரியர்கள்

Bharathajothi

மருத்துவர் பெ.பாரதஜோதி
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் 

Mantela1
மருத்துவர் து. மாண்டெலா
உதவிப்பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்