தொல்லறிவியல் துறை
நோக்கம்
அறிவியலின் பல்வேறு பிரிவுகளான தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல், கணிதவியல், வானியல், மண்ணியல், மருந்தியல், சோதிடவியல், போன்ற பல்வேறு அறிவியல் துறைகளில் பழந்தமிழர்களின் அனுபவ அறிவியல், அறிவுத் திறன் மற்றும் தொழில் நுட்பங்களைப் புத்தாய்வு செய்து அவற்றை இக்கால அறிவியல் நோக்கில் ஒப்பிட்டு, எதிர்கால அறிவியல் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் ஒருங்கிணைத்துத் தொகுத்தளித்தல். அவ்வாறு திரட்டப்பட்ட அறிவியல் தகவல்களை ஆய்வுத் தொகுப்புகள், நூல்கள், சரிபார்ப்புப் பட்டியல்கள் என்று படவிளக்கங்களுடன் வெளியிடுதல், காட்சிப்படுத்துதல் ஆகியவை இத்துறையின் முக்கிய நோக்கங்களாகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், பக்தி நூல்கள், நிகண்டுகள் மற்றும் தமிழ் மருத்துவ நூல்களில் குறிப்பிட்டுள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் கடலுயிரினங்கள் குறித்த செய்திகளைக் கொண்டு அவற்றின் இன்றைய வழக்குப் பெயர்கள், பொதுப் பெயர்கள், அறிவியல் பெயர்களைக் கண்டறிதல், காட்சிப்படுத்துதல், மக்கள் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் அவற்றை வெளியிடுதல் முதலியனவும் இத்துறையின் பிற பணிகளாம்.