நாடகத்துறை
நோக்கம்
தமிழ் நாடகக் கலையின் பல்வேறு பரிமாணங்களையும் ஆய்வு நிலையிலும் செயல்பாட்டு நிலையிலும் தமிழ்கூறு நல்லுலகம் அறியச் செய்யும் வண்ணம் ஆவணப்படுத்துவது, ஆக்கிக் காட்டுவது, ஆய்வது எனப் பங்களிப்பு செய்தல். தமிழ் நாடகச் சோதனை முயற்சியில் நாடக மரபு காத்து, மக்களுக்கும் நாடகத்தின் பயன் போய்ச் சேரும் விதத்தில் நாடக விரிவாக்கப் பணிகளிலும் ஈடுபட்டு உயரிய நாடகத்தை உருவாக்கத் தொடர்ந்து முனைதல். உயர்ந்த நாடக இலக்கியங்களை, நாடகக் கோட்பாடுகளைத் தமிழில் உருவாக்க முயற்சித்தல். தமிழ் நாடகத்தை உலகத்தரத்திற்குக் கொண்டு செல்லத் தூணாய் நிற்றல். தமிழ் நாடகம் வழி பழந்தமிழ் மரபு காத்தல் – தமிழ் நாடகம் தொடர்பான அனைத்து விவரங்களுக்குமான களமாய் நாடகத்துறை விளங்கச் செய்தல்.