சமூக அறிவியல் துறை
நோக்கம்
சமூக அறிவியல் துறை 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்துறை ஆய்வுத்துறையாகச் செயல்பட்டு வருகிறது. துறையில் பணியாற்றும் கல்வியாளர்களின் சிறப்புத் தகுதிகள் பன்முக நோக்கில் ஆய்வுகள் நடைபெற வழிவகுக்கின்றன. ஊரக நகரப்புறச் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பல்துறை அணுகுமுறையில் ஆராய்தல், பல்வேறு மக்களிடையே குறிப்பாகப் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்களிடையே மொழியியல் ஆய்வு மேற்கொள்ளுதல், பெண்கள் தொடர்பான ஆய்வுகள் குறிப்பாகப் பெண்களின் உரிமைகள், வேலைவாய்ப்பு, சிசுக் கொலை, குழந்தைத்தொழில் , கல்வி, சுற்றுச்சுழல், சுகாதாரம் மற்றும் தொழில் மேலாண்மை போன்றவற்றை ஆராய்தல், அரசின் நலத்திட்டங்கள் தொடர்பான பயன்பாட்டு ஆய்வுகள் செய்து திட்டங்களை வகுப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் அரசுக்கு உதவியாக இருத்தல்.
ஆய்வுத்திட்டங்கள் முடித்தளிக்கப்பெற்றவை
- குழந்தைகளுக்காக காந்தி.
- தமிழ்க் கலைக்களஞ்சியம், பொருளியல் வணிகவியல் மற்றும் மக்கள் தொகை.
- வேலை வாய்ப்புத் திட்டங்களில் வேலைவாய்ப்பும் முதலீடும்.
- சுய வேலைவாய்ப்புத் திட்டங்களின் நிதிச் செயலாண்மை.
- தமிழக ஊரகத் தொழில் வளர்ச்சிக்கான அகக்கட்டுமான அமைப்பு.
- பொருளியல் கலைச்சொல் விளக்க அகராதி.
- எய்ட்ஸ் கட்டுப்பாடும் விழிப்புணர்வும்.
- தமிழகக் கிராமம் ஒன்றில் உறவுமுறை.
- குறும்பர்களின் உறவுமுறை.
- சமகாலத் தமிழர்களின் உறவுமுறை அமைப்பு உறவுமுறைச் சொற்களும்.
- தமிழர்களிடையே குடும்பம் உறவுமுறை மற்றும் உறவுமுறைச் சொற்களின் பயன்பாடு.
- சமூகவியல் மற்றும் மானிடவில் கலைச்சொல் விளக்க அகராதி.
- சமூகவியல் கலைச்சொற்கள்.
- இளம் குற்றவாளிகளின் சமூகப் பொருளாதார நிலை.
- எழுத்தறிவும் சமூக விழிப்புணர்வும்.
- பள்ளி இடைவிலகல் சிக்கல்கள்.
- சமூகப்பணியில் கலைச்சொல் அகராதி.
- வணிக நிறுவனங்களின் குழந்தைத் தொழில்.
நடைபெற்று வருபவை
- தமிழக நகரங்களின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புக் காரணிகள்.
- வேளாண்மைப் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பொருளாதார முன்னேற்றமும்.
- திராவிட மற்றும் இந்தோ ஆரிய உறவுமுறை.
- கல்வியில் கலைச்சொல் அகராதி.
- வயது வந்தோர் கல்வியல் கலைச்சொல் அகராதி.
- இத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் – 11
- நடைபெற்று வருபவை-27
- ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்கள் – 31
- நடைபெற்று வருபவை- 11
- இத்துறை கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு பல்துறை ஆய்வு மூலம் தரமான கல்வி, பால் இன வேறுபாடற்ற மனிதவள மேம்பாட்டிறக்கு இன்றைய சமுதாயமும் பொருளாதாரமும் எதிர்கொள்கின்ற சவால்களை நிறை வேற்றப் பாடுபடுகிறது.