தத்துவ மையம்
நோக்கம்
தமிழ் மொழியில் அமைந்துள்ள சமய, தத்துவ நூல்களின் கருத்துகளை ஆய்ந்து எளிய தமிழில் கொணர்தல், திருமுறைகளை ஆய்தல், ஆகமங்களை மொழிபெயர்த்தல்
தமிழ் மொழியில் அமைந்துள்ள சமய தத்துவக் கருத்துகளை ஆய்ந்து மேலை நாட்டவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் பிற மொழிகளில் (குறிப்பாக ஆங்கிலத்தில் ) வெளியிடுதல்.
- இந்தியத் தத்துவங்கள், வேதங்கள் ஆகியனவற்றை ஆய்ந்து தமிழில் வெளியிடுதல்.
- மேலைநாட்டுத் தத்துவங்கள், சமயக் கருத்துக்கள் ஆகியனவற்றை எளிய தமிழில் கொணர்தல்.
- பணிப்பட்டறைகள், கருத்தரங்குகள் அமைத்துப் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை அறிந்து ஆய்வினைச் செம்மையுறச் செய்தல்.
பிற செய்திகள்
பல்கலைக்கழக மானியக்குழு நிதி நல்கையில் இத்துறையில் யோகா மையம் தொடங்கப் பெற்றுள்ளது. அதன் மூலம் பட்டய மற்றும் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கான மனித வள மேம்பாட்டுப் பயிற்சி (உடற்பயிற்சி மற்றும் தியானம்) வகுப்புகள் நடத்தப்படுகின்றன.