படிப்புப் பிரிவுகள்

பல்கலைக்கழகத்தில் நடைபெறும் படிப்புக்கள் பற்றிய விவரங்கள்

வ.எண்
புலத்தின் பெயர்
துறையின் பெயர்
படிப்பின் பெயர்
1 கலைப்புலம் சிற்பத்துறை முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
இசைத்துறை முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
நாடகத்துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
2 சுவடிப்புலம் ஓலைச்சுவடித்துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
3 வளர்தமிழ்ப்புலம் அயல்நாட்டுத்தமிழ்க் கல்வி துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
மொழிபெயர்ப்புத்துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
அகராதியியல் துறை முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
சமூக அறிவியல் துறை முதுகலை, சமூகபணி, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை இளங்கல்வியியல், கல்வியியல் நிறைஞர், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
4 மொழிப்புலம் இலக்கியத் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
மொழியியல் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
மெய்யியல் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
பழங்குடிமக்கள் ஆய்வு மையம்
நாட்டுப்புறவியல் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
5 அறிவியல் புலம் சித்த மருத்துவத் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
தொல்லறிவியல் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
தொழில் மற்றும் நிலஅறிவியல் துறை ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
கட்டடக் கலைத் துறை முனைவர் பட்டம்
கணிப்பொறி அறிவியல் துறை முது அறிவியல், ஆய்வியல் நிறைஞர்,முனைவர் பட்டம்
சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை முது அறிவியல்ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம்
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல்

மாணவர் நலனை மையமாகக் கொண்ட பணிகள்

  • மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித் தொகைகளும் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன.
  • துறைவாரியாக ஆண்டு வாரியாக அனைத்துப் படிப்புக்களிலும் முதல் 3 இடங்களில் வரும் மாணவ மாணவியற்கு மகாகவி பாரதியார் மற்றும் ஏ. டி. பன்னீர் செல்வம் அறக்கட்டளை வாயிலாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
  • ஆண்டுதோறும் பொங்கல் விழாவில் கலை இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன .
  • மாணவர்களுக்கு நாட்டுநலப்பணித் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
  • செஞ்சுருள் சங்கம் செயற்பட்டு வருகிறது.
  • மாணவியர்க்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  • மாணவ மாணவியருக்கான விடுதிகள் செயற்பாட்டில் உள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்