இலக்கியத்துறை
நோக்கம்
18.05.1982 ஆம் நாள் இலக்கியத்துறை நிறுவப்பெற்றது. 2500 ஆண்டு கால வரலாற்றுக்குட்பட்ட பல்வேறு காலக்கட்டத் தமிழ் இலக்கியங்களின் பல்வேறு பரிமானங்களை இன்று வளர்ந்திருக்கும் உயர் ஆராய்ச்சி முறைகளுக்கேற்ப வரலாறு, சமூகவியல், உளவியல், மக்கள் தொடர்பியல் மற்றும் பெண்ணியம் போன்ற கோட்பாடுகள் சார்ந்து இத்துறையினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றும் தமிழ் மரபிற்கே உரிய இலக்கியக் கோட்பாடு உருவாக்கம் ஒப்பிலக்கிய ஆய்வு ஆகிய பொருண்மைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சங்க இலக்கியம் மற்றும் பிற இலக்கியங்களை ஆராய்வதற்கு நோக்கீட்டு நூல்களாகப் பயன்படக்கூடிய இலக்கியப் பொருட்களஞ்சியங்களை உருவாக்குவதும் இலக்கியத்துறையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், ஆய்வுத்திட்டங்கள் மேற்கொள்ளுதல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பாடங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் முதுகலைத்¢ தமிழ் வகுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கியக் கல்வியை வளர்த்தல், உயர்நிலை ஆய்வைப் பெருக்குதல், சிறந்த நூல்களை வெளிக்கொணருதல், கல்லூரி ஆசிரியர்களுக்கான புத்தொளிப்பயிற்சி வகுப்புகள் நடத்துதல் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறப்புச் செய்திகள்
- துறையினர் அனைவரும் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துகின்றனர்.
- துறையினர் அனைவரும் ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டிகளாகப் பணியாற்றுகின்றனர்.
ஆசிரியர்கள்
முனைவர் ஜெ.தேவி
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
முனைவர் பெ.இளையாப்பிள்ளை
பேராசிரியர்
முனைவர் அ. இரவிச்சந்திரன்
இணைப்பேராசிரியர்
முனைவர் இரா. தனலட்சுமி
உதவிப்பேராசிரியர்