தொழில் மற்றும் நில அறிவியல் துறை
நோக்கம்
நில அறிவியல், புவியியல், கடலியல், சுற்றுச் சூழல் பதுகாப்பு ஆகிய துறைகளில் தமிழகத்தை அறிவியல் அடிப்படையிலும் தொழில் நுட்பத்திலும் முன்னேற்றமடைந்த மாநிலமாக ஏற்படுத்துதல் மற்றும் இயற்கை வனப் பராமரிப்பு, பாதுகாப்பு, சிக்கனச் செலவீட்டிற்குத் தேவையான மனிதவளத்தைப் பெருக்குதல், தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் துறைகளான கடற்கரைப் பராமரிப்பு, சுற்றுப்புற மாசுபடுதலைக் கண்காணித்தல், தொலை உணர்வு, கடற்கரைச் சுரங்கம், இயற்கை வளப் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பாகச் செல்படுவதற்கு உயராய்வு மையத்தை ஏற்படுத்துதல், மரபுவழி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உத்திகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான புள்ளி விவரங்களைச் சேகரித்தல்.
இதுவரையில் முடித்து அளிக்கப்பட்டுள்ள ஆய்வுத் திட்டங்கள் (16)