மொழிபெயர்ப்புத்துறை

நோக்கம்

தமிழ் இலக்கிய நூல்களைப் பிற மொழிகளிலும் பிற மொழி இலக்கியங்களைத் தமிழ் மொழியிலும் மொழிபெயர்த்தல்.

தமிழ் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களையும், பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியம், அறிவியல் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும் மதிப்பீடு செய்து புதிய மொழிபெயர்ப்பு நுணுக்கங்களை ஆய்தல்.

கல்லூரி ஆசிரியர்களிடம் மொழிபெயர்ப்பு நுணுக்கங்களையும் திறன்களையும் வளர்த்தல்.
மொழிபெயர்ப்பு நூல்கள் உருவாக்குதல், மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு நுணுக்கங்களைக் கற்பித்தல், மொழிபெயர்ப்பு ஆய்வுச் செயல் பாட்டிற்குத் துணை நிற்றல்.

ஆய்வுப்பணி

மொழிபெயர்ப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுதல்.

மொழிபெயர்ப்புத்துறையிலுள்ள முனைவர் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதும் நெறிப்படுத்துதலும்.

அகராதியியல் துறை, மொழியியல் துறை, இலக்கியத்துறை ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு தொடர்பாக வகுப்பு எடுத்தல்.

இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்), இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அலுவலர்களுக்குத் தமிழ்ப் பயிற்சி வகுப்பில் மொழிபெயர்ப்பு வகுப்புகள் எடுத்தல் போன்றவை.

ஆசிரியர்கள்

Dr.rajesh
முனைவர் ப. இராஜேஷ்
இணைப்பேராசிரியர்

Dr.veeralakshmi
முனைவர் சௌ. வீரலட்சுமி
இணைப்பேராசிரியர் 

murugan
முனைவர் இரா.சு. முருகன்
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்

 Dr.vijaya rajeshwari
முனைவர் எஸ். விஜயராஜேஸ்வரி
உதவிப்பேராசிரியர்

செய்திகளும் நிகழ்வுகளும்