புல விருந்தகம்
அனிச்ச மலர் முகர்ந்த அளவில் வாடும், விருந்தினரோ முகம் வேறுபட்டு பார்த்த அளவிலேயே வாடிவிடுவர். அனிச்ச மலரினும் மென்மைத் தன்மைவாய்ந்த விருந்தினர்களை, வாடாது காக்கும் பணியைச் செவ்வனே செய்ய வேண்டிய பொறுப்பினை உடையது மக்கள் தொடர்புப் பிரிவு. இப்பிரிவின் கீழ் புலவிருந்தகம் செயல்படுகிறது. புலவிருந்தகக் காப்பாளர், உணவக உதவியாளர்கள் போன்ற நிலைகளில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு இப்பிரிவு வருகைதரும் விருந்தினர்களை விருந்தகத்தில் தங்க வைத்து உபசரித்தல், விருந்தோம்பல் போன்ற பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.