அண்ணாவும் பாவேந்தரும்

நூலாசிரியர்: கவிஞர் கா. வேழவேந்தன்
வெளியீட்டு எண்: 347, 2009, ISBN: 978-81-7090-390-1
டெம்மி1/8, பக்கம் 173, உரூ. 80.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அறிஞர் அண்ணாவையும் பாவேந்தர் பாரதிதாசனையும் மேலும் நன்கு அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்.
இணையிலா இவ்விருவரின் மொழித்தொண்டு, அறிவியக்கம், இந்தி எதிர்ப்பு, பெண்ணியம் போற்றுதல், கொள்கையில் உறுதி, திருக்குறள் போற்றிய திறன், ஒருவர் மற்றவர் போற்றிய பண்பு, எழுத்தும் பேச்சும் பொதுவுடைமை, கலையுலகம், எளிமை, உழைப்பு போன்ற இருபதிற்கும் மேற்பட்ட தலைப்புகளில் கவிஞர் தமக்கே உரிய கவிதை நடையில் போற்றி உரைக்கின்றார்.
நாடும் நல்லோரும் போற்றிய ஈடில்லாத் தோன்றல்களாக, மறைந்தும் மறையாது இறவாப் புகழ் பெற்றோருமாகிய அறிஞர் அண்ணாவும் பாவேந்தர் பாரதிதாசனும் பற்றி அறிய விழைவும் அனைவருக்கும் இந்நூல் பெருவிருந்தாகும்.

செய்திகளும் நிகழ்வுகளும்