பயிரிடாத் தாவரங்களின் பயன்பாடு

முனைவர் ஆ. இராசேந்திரன்
வெளியீட்டு எண்: 291, 2005, ISBN:81-7090-352-1
டெம்மி1/8, பக்கம் 156, உரூ. 70.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்நாட்டில் கொல்லிமலை போன்ற பலவிடங்களில் அரிய மூலிகைகள் தானாகவே வளர்ந்து பயனளித்து வருகின்றன. இவ்வகையில் மருந்தாகும் தாவரப்பகுதிகள், மருந்தாக்கம் செயல் முறைகள், மருந்தளிக்கும் விதங்கள் போன்ற பல தகவல்களை ஆசிரியர் தொகுத்து வழங்கியுள்ளார்.

கொல்லிமலையிலுள்ள மூலிகைத் தாவரங்களின் மருத்துவப் பண்புகளை நன்கறிந்த மருத்துவர்களிடமும், பழங்குடி மக்களிடமும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் நூல்களில் கூறப்பெறும் கொல்லிமலையின் சிறப்புகள், அங்குள்ள பழங்குடி மக்களின் சிறப்புகள், பழக்க வழக்கங்கள், அங்கு வாழ்ந்த சித்தர்களின் வரலாறுகள், அம்மலையில் காணப்பெறும் அதிசய மூலிகைச் செல்வங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

செய்திகளும் நிகழ்வுகளும்