அகராதியியல்

நூலாசிரியர்: முனைவர் பெ. மாதையன்
வெளியீட்டு எண்: 194, 1997, ISBN:81-7090-254-1
டெம்மி1/8, பக்கம் 490, உரூ. 140.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

பயன்பாட்டு மொழியியலின் ஒரு பிரிவான அகராதியியல் பற்றிய அடிப்படை நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்லது. தமிழுக்குப் புது வரவான இந்நூல் பாட நூலாகவும் கையேடாகவும் பயன்படத்தக்கது. இந்நூலுள், அகராதியியலும் அகராதிச் சொற்பொருளியலும், அகராதி வரலாறு, அகராதி வகைகள், சொல் வேறுபாடுகள், சொற்பொருள் உறவும் சொல்வகைப்பாடும், அகராதி உருவாக்கம், திட்டமிடலும் தரவு மூலச் சேகரிப்பும், பதிப்புப்பணி, அச்சுப்படி தயாரித்தல், இருமொழி அகராதி உருவாக்கம், அகராதிப் புறப்பகுதியும் பயன்பாட்டாளர் குறிப்பும் ஆகிய பத்து இயல்கள் உள்ளன. முன் ஐந்து இயல்களும் அகராதியோடு தொடர்புடைய புறநிலைத் தகவல்களை ஆராயும் நிலையில், பின்னுள்ள ஐந்து இயல்களும் அகராதி உருவாக்க நடைமுறை பற்றியனவாய் அமைகின்றன. அகராதித் தொகுப்புக்கலை நெறிகளுக்கும் அகராதி ஆய்வுகளுக்கும் பயன்பாடுடைய அடிப்படை நூலாக இது அமைந்துள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்