பழவேற்காடு கி.பி.1816இல் (மெக்கன்சியின் சுவடி – பதிப்பாய்வு)

முனைவர். ம. இராசேந்திரன்
வெளியீட்டு எண்: 279, 2004, ISBN:81-7090-342-4
டெம்மி1/8, பக்கம் 400, உரூ. 125.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அறிஞர் மெக்கன்சி (1754-1821) தொகுத்த பழவேற்காடு கைபீது என்னும் சுவடியை முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் விரிவான ஆராய்ச்சி முன்னுரையோடு பதிப்பித்துள்ளார். இரண்டு நூற்றாண்டிற்கு முன்னிருந்த பழவேற்காட்டின் சிறப்பு, அக்காலத் தமிழக அரசியல் சமுதாய நிலைகள், தொல் பழங்குடிகளின் வாழ்க்கை முறை போன்றவற்றை இந்நூலில் விளக்கக் காணலாம்.

கடல்கள். உயிரினங்கள், மீன் வலைகள், மக்கள் தொகை, பாகுபாடு, பழக்க வழக்கங்கள், மணமுறைகள், தொழில்கள் போன்ற செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

நூலிலுள்ள அரிய படங்கள், பின்னிணைப்புகள், அகராதிகள், துணைநூற்பட்டியல் போன்றவை பல்துறை ஆய்வுக்கு மிகவும் பயன் தருவன.

சுவடிப் பதிப்பாய்வில் இப்பதிப்பு நூல் ஒரு முன்னோடி நூலாக விளங்குகின்றது.

செய்திகளும் நிகழ்வுகளும்