இணையம்
மைய அரசின் “தகவல் தொழில் நுட்பம் வழி தேசியக் கல்வித் திட்டத்தின்” [NMEICT-National Mission for Education through Information and Communication Technology] கீழ் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1 ஜி.பி கொள்திறன் கொண்ட இணையத்தொடர்பை நிறுவியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வளாக வலைப்பின்னல் [Campus LAN – Local Area Network] இணைப்பும் வழங்கப்பட உள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணைய மையம் நிர்வாகக் கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் சேவையை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.