மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி

பதிப்பாசிரியர்: முனைவர் இரா.சபேசன்
வெளியீட்டு எண்: 202, 1997, ISBN:81-7090-262-2
டெம்மி1/8, பக்கம் 334, உரூ. 120.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

இயற்பியல், குறிப்பாக மின்னியல், காந்தவியல், மின்னணுவியல் ஆகியவற்றில் காணப்படும் அடிப்படை விதிகள், கோட்பாடுகள், தற்கோள்கள், வரையறைகள், விளைவுகள் போன்றவை முழுவதுமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. கருவிகளின் அமைப்பு, செயல்முறை, படித்தர மின் சுற்றுக்களின் படங்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கலைச்சொல்லும், குறிப்பாக எந்தெந்தத் துறையில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆங்காங்கே பிறைக்கோடுகளுக்குள் சுருக்கக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியில், படிப்பவருக்குப் பயன்தரும் வண்ணம் கலைச்சொற்களின் தமிழ் அகரவரிசைப் பட்டியலும் மேற்கோள் நூல்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளன.

பல புதிய நூல்களைத் தமிழில் எழுத இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையும்.

செய்திகளும் நிகழ்வுகளும்