தம்பிக்கு அண்ணா

பதிப்பாசிரியர்: முனைவர். பெ. இராமலிங்கம்
வெளியீட்டு எண்: 337, 2008, ISBN:81-7090-398-x
டெம்மி1/8, பக்கம் 238, உரூ. 150.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

அண்ணாவின் கடிதங்களில் காணும் மொழி, இலக்கியம், கலை பற்றிய சிந்தனைகளை அவர் மொழியிலேயே அப்படியே இந்நூல் தருகிறது.

அண்ணாவின் கடிதங்கள் மொத்தம் 290. இவற்றை முதலில் பாரி நிலையம் சிறுசிறு பகுதிகளாக நூல் வடிவம் தந்து வெளியிட்டது. பின்னர் அதில் விடுபட்ட கடிதங்களையும் சேர்த்து பூம்புகார் பதிப்பகம் 7 மடலங்களாக வெளியிட்டது. பாரி நிலையப் பதிப்பிற்கு நாவலர் தந்த அணிந்துரையுடன் இக்கடிதங்களை 10 மடலங்களாகத் தமிழரசிப் பதிப்பகம் தந்துள்ளது. இம்மூன்று பதிப்புகளிலுள்ள அண்ணாவின் கடிதங்கள் அவரின் உள்ளத்தைத் தெற்றெனக் காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குவதை இந்நூல் வழியே காணலாம்.

செய்திகளும் நிகழ்வுகளும்