தமிழிசையியல் வளர்ச்சியில் குடந்தை ப. சுந்தரேசனார் பங்கு

நூலாசிரியர்: முனைவர்: இ. அங்கயற்கண்ணி
வெளியீட்டு எண்: 302, 2006, ISBN:81-7090-363-7
டெம்மி1/8, பக்கம் 142, உரூ. 60.00, முதற்பதிப்பு
சாதாக்கட்டு

தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் பன்மொழிப் புலவருமாவார். இசைக்கலையில் ஆய்வுகள் மேற்கொண்ட இவர்தம் வாழ்நாளில் வழங்கிய இசை பற்றிய நூல்கள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், இசையரங்குகள் போன்றவற்றின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக இந்நூல் உருவாக்கு வெளியிடப்பெற்றுள்ளது.
முதலில் தமிழிசை வரலாறு பற்றி விளக்கிய பின்னர் இருபதாம் நூற்றாண்டு இசையியல் வல்லுநர்களை அறிமுகப்படுத்திய ஆசிரியர் குடந்தை ப.சுந்தரேசனாரின் இசையியற் கோட்பாடுகளையும் செயல்முறை விளக்கத்திறனையும் விவரிக்கின்றார்.
இசை ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுடைய நூல்.

செய்திகளும் நிகழ்வுகளும்