வாழ்வியற் களஞ்சியம் தொகுதி – 1

முதன்மைப் பதிப்பாசிரியர்: முனைவர் நா. பாலுசாமி
வெளியீட்டு எண்:53-1, 1986, ISBN
டெம்மி 1/4, பக்கம் 976, உரூ. 700.00, முதற்பதிப்பு
மறுபதிப்பு:800.00
முழு காலிகோ

இவ்வாழ்வியற் களஞ்சியம் இன்று வரை வளர்ந்துள்ள கோட்பாடுகள், கொள்கைகள், கருத்துக்கள், செய்திகள் ஆகியவற்றை உள்ளடக்கித் திகழ்கிறது.

சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரால் 1947-இல் தொடங்கி 1954-இல் வெளியிடப்பெற்ற முதல் தொகுதியில் உள்ள வாழ்வியல் தலைப்புகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவை இக்கால வளர்ச்சியைப் புலப்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அன்றியும், ஏறத்தாழ இருமடங்கு புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பிரிட்டானிகா அமெரிக்கானா கலைக்களஞ்சியங்கள், சமூகவியல், கல்வியியல் களஞ்சியங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ 900 தலைப்புகளில் ( ‘அ’ முதல் ‘அளபெடை’ வரை ) இத்தொகுதி கொண்டுள்ளது.

செய்திகளும் நிகழ்வுகளும்