அரிய கையெழுத்துச் சுவடித்துறை
நோக்கம்
அரிய கையெழுத்துச் சுவடிகளையும் அரிய அச்சு நூல்களையும் சேகரித்து அவற்றை அறிவியல் தொழில் நுட்ப முறையில் பாதுகாத்தல், உலகில் பல்வேறிடங்களிலுள்ள அரிய தமிழ்க் காகிதச் சுவடிகளின் பட்டியலைத் தயாரித்து வெளியிடல், அரிய சிறந்த தமிழ்க் காகிதச் சுவடிகளை உரிய ஆய்வுக் குறிப்புகளுடன் பதிப்பித்து வெளியிடல். தமிழர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார, பண்பாட்டு வரலாற்றினைக் காகிதச் சுவடிகள் மற்றும் பிற சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து வெளியிடல்.
ஆய்வுப் பரப்பு: சேகரிக்கப்பெற்ற சுவடிகள், ஆணைகள், முதலானவற்றின் அடிப்படையில் தமிழக வரலாறு, பண்பாடு, இலக்கியம் போன்றவற்றை ஆய்வு செய்து வெளியிடல்.
கற்பிக்கப்படும் வகுப்புகள்
பெருஞ்சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புகள்
சுவடியியல், அச்சும் பதிப்பும், முதுகலை, தமிழ் (தமிழியல், சுவடியியல், பதிப்பியல்) ஆய்வியல் நிறைஞர், முனைவர்.
ஆவணக் காப்பகம்
அரிய கையெழுத்துச் சுவடித்துறையில் இயங்கிவரும் ஆவணக்காப்பகத்தில் 320 அரிய காகிதச் சுவடிகள், 25 அச்சு நூல்கள் 300 கடிதங்கள், 25 வரைபடங்கள் முதலானவை சேகரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. தமிழகத்திலுள்ள பல்வேறு ஊர்களுக்குக் களப்பணி மேற்கொள்ளப்பட்டுச் சுவடிகளும் ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன. 17,18 ஆகிய நூற்றாண்டுகளைச் சேர்ந்த தஞ்சை மராத்தியர் காலத்தைச் சேர்ந்த மோடி ஆவணங்கள் சென்னை, கடலூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலுள்ள ஆவணக் காப்பகங்களிலிருந்து பெறப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆசிரியர்கள்
முனைவர் த. கண்ணன்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
முனைவர் த.ஆதித்தன்
இணைப்பேராசிரியர்