கட்டடக் குழு
பொறியியல் பிரிவு வழி, 365 நாள்களும் முறைப்பணியின் கீழ் நீர் வழங்குதல் மற்றும் மின் வழங்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டட நல்கைகளுக்கான முன்மொழிவுகள் பொறியியல் பிரிவு வழித் தயாரிக்கப்பெற்றுத் தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக நல்கை ஆணையம் ஆகியவற்றிற்கு அனுப்பப் பெறுகின்றன. பெறப்படும் நல்கைகள் கட்டடக்குழு இசைவு பெற்றுத் தமிழக அரசின் தொழில் நுட்பக்கல்வித்துறை வழி வைப்புத் தொகைப் பணிகளாக மேற்கொள்ளப்படுகின்றன.தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்கும் பொதுப்பணித் துறையின் தொழில் நுட்பக் கல்வித்துறைக்கும் இணைப்புப் பாலமாக உரிய ஒருங்கிணைப்புப் பணிகள் பொறியியல் பிரிவால் மேற்¢கொள்ளப்பெறுகின்றன.
பட்டமளிப்பு விழா உள்ளிட்ட விழா ஏற்பாட்டுப் பணிகளில் பொறியியல் பிரிவினால் ஒருங்கிணைப்புப் பணிகள், நிலஎடுப்புத் தொடர்பான நடவடிக்கைகள், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக் குடியிருப்புகள் மற்றும் அரங்க ஒதுக்கீடுகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகிறது.